நடிகர் திலகம் சிவாஜி கணேசனை “பெண் வேடத்தில்” பார்த்து உள்ளீர்களா.! இதோ புகைப்படம்.!

நடிப்பு என்றால் நம் மனதில் முதலில் வருபவர் சிவாஜி கணேசன் இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது அந்த அளவிற்கு சினிமா உலகில் நடித்துள்ளார் இவர் இதுவரை தமிழ் திரை உலகில் மட்டுமே 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மற்ற மொழிகளிலும் சேர்த்து பார்த்தால் 288 படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சின்ன வயதில் இருந்து இவருக்கு நாடக மேடை ரொம்ப பிடித்து போயிருந்தது அதை பார்க்க தனது தந்தையுடன் செல்வார் சிவாஜி சில நாட்களில் அந்த கதாபாத்திரத்தை போல இவர் நடிக்க ஆரம்பித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஒரு கட்டத்தில் நாடக மேடையில் சேர்ந்து அதிலிருந்து பிரபலமடைந்து சினிமா பக்கம் வந்தார்.

சினிமாவில் ஒரு கட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே இவர் வாழ்ந்து நடித்ததால் அந்த படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. ஏன் இப்பொழுது இருக்கும் தலைமுறைக்கு கூட சிவாஜி படங்கள் ரொம்ப பிடித்து உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட படங்கள் ஏராளம்..

அதில் ஒரு சில படங்கள் பாசமலர், நவராத்திரி, வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தார். சிவாஜி அவர்கள் இப்பொழுது இருக்கும் காலகட்ட நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில்  சிவாஜி கணேசன் சினிமா உலகில் பல கெட்டப்புகளை போட்டுள்ளார் அதில் ஒன்றாக சிவாஜி கணேசன் அவர்கள் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்பொழுது நமக்கு கிடைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அச்சு அசல் பெண் போலவே மாறி இருக்கும் நம்ம நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள்.. இதோ அந்த புகைப்படம்.

sivaji
sivaji

Leave a Comment