அடுத்தகட்ட பயிற்சியில் இறங்கிய தல அஜித்.!! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டிப் பறந்த வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் எதுவும்  வெளிவராத காரணத்தினால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட இன்னும் பலரிடம்  வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து தல அஜித்  விரைவில் படம் ரிலீசாகும் யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறியிருந்தார்.

இதனைக் கேட்டு தல ரசிகர்கள் தற்போது அமைதியாக இருந்து வருகிறார்கள். தற்போது வரையிலும் வலிமை திரைப்படம் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.இந்நிலையில் தல அஜித் சினிமாவில் மட்டுமல்லாமல் பைக்  ஃபேஸ், துப்பாக்கி சுடுதல் பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சில காலங்களாகவே தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.அவ்வப்போது எடுத்த பல புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள ரைபிள் பயிற்சி அகாடமியில் தல அஜித்  பயிற்சி பெற்று வருகிறார்.

ajith 01
ajith 01

அப்பொழுது எடுத்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் தல அஜீத் மொட்டை தலையுடன், வெள்ளைநிற டி-ஷர்ட் மற்றும் காக்கி கலர் பேண்ட் அணிந்திருக்கிறார். இந்த நிலையில்  துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சியின் போது எடுத்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

ajith 3
ajith 3

ajith 5
ajith 5

 

Leave a Comment