சுஷாந்த் சிங்கின் வழக்கில் முன்னாள் காதலி கைது !! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

0

sushanth singh lover arrested:பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார. இவர் ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் இறப்பு குறித்து சந்தேகம் ஏற்பட அவரது தந்தை கே கே சிங் பீகார் போலீசில் சுஷாந்த்  சிங்கின் காதலி மீது புகார் அளித்திருந்தார்.

மேலும் முக்கியமாக அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி தான் இவரது இறப்பிற்கு காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் இவரது இறப்பு பல சர்ச்சைகளை எழுப்பியுளளது. தொடர்ந்து ரியா சக்ரபோர்த்தியிடம் போலீஸ் விசாரணை நடத்தி வந்தது.

போலீசை தொடர்ந்து தற்போது இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மூன்று பிரிவினர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் போதை பொருள் கும்பலுடன் ரியாவிற்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. எனவே அதனை ஒட்டி ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் இன்னும் சிலர் மீது போதைப் பொருள் ஒழிப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று செப்டம்பர் 7 அன்று போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரியா சக்ரபோர்த்தியிடம் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அதன் காரணமாக நடிகை ரியா சக்ரபோர்த்தி இன்று போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது இந்த சம்பவம் சுஷாந்த் சிங்கின் வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக உள்ளது என புரிய வருகிறது.

riya
riya
riya2
riya2