இளம் நடிகர் சுஷாந்த்தின் மரணம் குறித்து அவரது சமையல்காரரின் பரபரப்பு தகவல்.!! வீடியோ இதோ.

0

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்த நடிகர் சுஷாந்த் சிங்.அவர் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரின் இறப்பிற்கு பாலிவுட் திரை உலகில் நிலவும் நிப்போட்டிசம் தான் காரணம் என்று பேசப்பட்டு வந்தது. மேலும் அவர் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டு வந்தது.

அதுமட்டுமல்லாமல் தனது காதலியான நடிகை ரியா சக்ராபொர்த்திக்கு இவரது மரணத்தில் தொடர்பு உள்ளது எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்நிலையில் சுஷாந்த் சிங் வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு வேலை செய்த சமையல்காரர் அசோக் அளித்த பேட்டியில் நான் அவரிடம் இருந்த போது அவர் சந்தோஷமாக இருந்தார்.

அவர் எந்த மன அழுத்தத்திலும் இல்லை. எந்த மருந்துகளும் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல அப்போது அவருக்கும் ரியாவுக்கும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை, சகஜமாகவே இருந்தது என அவர் தெரிவித்தார்.

மேலும் அதனைத்தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் வீட்டில் தற்போது வேலை செய்த சமையல்காரர் நீரஜ்ஜிடம் அவர் இறந்த அன்று காலை என்ன நடந்தது என்று விசாரித்த பொழுது அவர் கூறியதாவது. இறப்பதற்கு முந்தைய நாள் இரவு, இரவு சாப்பிட என்ன வேண்டும் என கேட்டோம், அவர் மேங்கோ ஷேக் போதும் எனக் கூறினார்.

பிறகு காலை உணவை கேட்டபோது ஆரஞ்சு ஜூஸ், இளநீர், வாழைப்பழம் போதும் என தெரிவித்தார். அவர் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் இளநீர் மட்டுமே பருகினார். அதனை தொடர்ந்து மதிய உணவைப் பற்றி கேட்க கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை, பிறகு திறந்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்துகொண்டு மரணம் அடைந்திருந்தார் என தெரிவித்தார்.

மேலும் ரியா மற்றும் சுஷாந்த் சந்தோஷமாகவே இருந்தார்கள் என்றும் அவர்கள் இருவரும் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்று வந்தனர் அதன் பிறகுதான் சுஷாந்த் நார்மலாக இல்லை எனவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.