தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வந்த இவர் சமீபத்தில் வெளிவந்த என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்து மோசமான விமர்சனத்தைப் பெற்றது.
எனவே இவரை பலர் உங்களுக்கு நடிக்கத் தெரியவில்லை உட்பட பல வற்றை கூறி சூர்யாவை கலாய்த்து வந்தார்கள். அந்த வகையில் அனைவருக்கும் பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் சினிமாவில் இவருக்கு மீண்டும் ஒரு நல்ல பெயர் வாங்கித் தந்தது.
இந்நிலையில் தற்போது இவர் தனது 39 மற்றும் 40வது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துவரும் 40வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி வருகிறார் .இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இத்திரைப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்னும் பல திரை பிரபலங்களும் நடித்து வரும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதன் பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்த பிறகு மீண்டும் சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அந்த வகையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம் அதிகளவில் இருப்பதால் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் சில தினங்களிலேயே உயிர் இழந்து விடுகிறார்கள். எனவே சூர்யா தனது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தற்போது 40 திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
இப்படிப்பட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை எனவே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று பலரும் புலம்பி வருகிறார்கள். ஏனென்றால் சூர்யாவின் படம் தான் இப்படி ஆகிறது என்றால் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படமும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவும் கொரோனா தாக்கத்தால் பாதியிலேயே நின்று விடுமோ என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் கவலையில் இருந்து வருகிறதாம்.