சுரரைபோற்று எப்பொழுது ரிலிஸ் படக்குழுவின் அதிரடி அறிவிப்பு.?

0

actor surya movie surarai potru movie release date announced: தமிழ் நடிகர்களில் விஜய், அஜித்திற்கு போட்டியாக படங்களை வெளியிடும் நடிகர் சூர்யா. தமிழ்நாட்டில் அதிக பெண்களை ரசிகர்களாக கொண்டுள்ளார் . இதற்கு முன் நடித்த தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான் போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது. இந்தநிலையில் சுதா கொங்கரா உடன் சூர்யா இணைந்த முதல் படம் சூரரைப்போற்று.

இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வளர்ந்து வரும் இளம் இசை இயக்குனர் ஜிவி பிரகாஷின் அனைத்து பாடல்களுமே ஹிட்டான காரணத்தினால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இதனையடுத்து சூரரைபொற்று படத்தில் இருந்து வெளியான மேக்கிங் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படம், கோபிநாத் என்ற பைலட்டின் வாழ்க்கையை தழுவி எடுப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை அடுத்தே இந்த படத்திற்காக சூர்யா தனது உடல் எடையை குறைத்து மறுபடியும் 25 கிலோ ஏற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வளவு ஆர்வத்தைத் தூண்டும் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை திரைப்படக் குழு அளித்துள்ளது.  அது என்னவென்றால் அக்டோபர் 30-ஆம் தேதி இந்தப் படம் ஓடிடி யில் மட்டுமே ரிலீசாகும் என்றும், தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாது என்றும் படக்குழு அறிவித்தது. இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.