48வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? விவரம் இதோ..

நடிகர் சூர்யா தனது 48வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் மேலும் இவர் நடித்து வரும் கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் வெளியிட்டு படக் குழு அசத்தி இருக்கின்றனர்.

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சூர்யா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு அடுத்ததாக சூர்யா இருந்து வரும் நிலையில் 50 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

மேலும் 2டி நிறுவனம் தயாரிப்பில் பல திரைப்படங்களை தயாரித்து அதில் பல நடிகர்,நடிகைகளுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு வரை நடிகர் சூர்யாவிடம் 180 கோடி அளவில் சொத்து மதிப்பு ஒருந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது 200 கோடிக்கு அதிகமான சொத்துக்களுடன் நடிகர் சூர்யா இருந்து வருகிறார்.

சமீபத்தில் மும்பையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் குடியேறிய சூரியா அங்கேயும் பல கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். இதனை அடுத்து நடிகர் சூர்யாவிடம் 1.3 கோடி மதிப்புள்ள எம்ஏடபுள்யூ 7 சீரிஸ் 730Ld, ரூபாய் 80 லட்சம் மதிப்பிலான ஆடி Q7, ரூபாய் 60 கோடி லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் M கிளாஸ், ரூபாய் 1.1 கோடி மதிப்பிலான ஜாகுவார் xj L போன்ற கார்களும் உள்ளது.

இவ்வாறு நடிகர் சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் ஏராளமான தொழில்களை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவருடைய நடிப்பில் தற்போது கங்குவா படம் உருவாகி வரும் நிலையில் அடுத்த பாகுபலியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment