விடுதலை படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி.! அதிலும் வெற்றிமாறன் என்ன செய்கிறார் கவனித்தீர்களா.?

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை மக்களிடமிருந்து பெற்ற திரைப்படம் தான் விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,சூரி,பவானி ஸ்ரீ,சேத்தன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் அதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தின் வசூல் மட்டுமே பல கோடி வரை தாண்டி விட்டதாம்.

இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு விடுதலை படக்குழுவை பாராட்டாத பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் அனைத்து பிரபலங்களும் பாராட்டினார்கள்.சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை பட குழுவுடன் பார்த்துவிட்டு பாராட்டியது மட்டுமல்லாமல் நானும் இரண்டாம் பாகத்திற்க்கு காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள் விடுதலை இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என வெற்றிமாறனிடம் கேட்டபொழுது இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் இருக்கிறது அது முடிந்துவிட்டால் கூடிய சீக்கிரம் இரண்டாம் பாகமும் வெளிவந்து விடும் என்று கூறியதாக தகவல் வெளியாகியன.

இந்நிலையில் நடிகர் சூரி தனது twitter பக்கத்தில் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் ஆம் வெற்றிமாறன் சூரிக்கு படப்பிடிப்பு தளத்தில் நின்று கதை சொல்லும் பொழுது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது மேலும் இந்த புகைப்படத்தில் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி பவானி ஸ்ரீ மற்றும் படக்குழுவினர்கள் இருக்கிறார்கள்.

நடிகர் சூரி இந்த புகைப்படத்தை பதிவிட்டு வெற்றிமாறனை பாராட்டி உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்பொழுது இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment