இது ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு என விடுதலை படத்தின் படப்பிடிப்பிலிருந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் தற்பொழுது விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூரி படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில் எண்ணிக்கை கம்மியாக இருந்தாலும் கூட அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவனும் நடித்த வருகிறார். இவ்வாறு இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதனை அடுத்து இந்த படத்திற்கு இசைய ராஜா இசையமைக்க ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இதற்கு முன்பு இந்த படத்தில் இருந்து வெளியான அப்டேட்டில் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் சூரியாவாக இருந்தாலும் இந்த கதையின் ஹீரோ விஜய் சேதுபதி தான் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப்படிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இந்த படத்தின் ரிலீசாக காத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது விடுதலை படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு என பதிவிட்டுள்ளார் தற்பொழுது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.