மீண்டும் அதிரடியாக கலமிரங்கிய நடிகர் ஸ்ரீகாந்த் !! புதிதாக நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

Actor Srikanth is comming back in action: நடிகர் ஸ்ரீகாந்த் 2000ம் ஆண்டு வெளியான ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம்,  பார்த்திபன் கனவு, கனா கண்டேன், பம்பரக் கண்ணாலே, மெர்குரி பூக்கள், ஓம் சாந்தி ஓம், சௌகார்பேட்டை போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருந்தார்.

தற்போது இவர் மீண்டும் “மிருகா” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் முதலில் ரிலீசாகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து இவர் “மகா” படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்பு அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக விஜய் ஆண்டனி உடன் இணைந்து “காக்கி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இரு கதாநாயகிகள் என்றும் அதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும் இவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவினால் பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த காக்கி திரைப்படம் சமுதாய சிந்தனையை கொண்டதாகவும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு இவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில்  நடித்து வருவதாகவும், இந்த படமும் பாதியிலே நிற்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment