செம மாஸ்சாக இருக்கும் சூரி.. ஹீரோவாக பத்து பொருத்தமும் பக்காவா இருக்கே.!

பிரபல காமெடி நடிகர் சூரி நீண்ட காலங்களாக சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வந்த இவர் தற்பொழுது முன்னணி நடிகர்கள் அளவிற்கு வளர்ந்திருப்பது பாராட்டிற்குரிய விஷயமாக அமைந்துள்ளது. அந்த வகையில் தனது லுக்கையும் மாற்றி ஹீரோ போலவே இருக்கும் இவருடைய மாசான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான சூரி இதனை தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஷால் தான் இவருடைய நெருங்கிய நண்பர்கள். அப்படி சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து விஜயுடன் வேலாயுதம், ஜில்லா போன்ற திரைப்படங்களில் சூரி தனம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக சூரி நடித்து மிரட்டினார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பு இந்த படத்தில் பாராட்டப்பட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது இந்த படத்திற்கு பிறகு சூரி தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கும் நிலையில் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

soori
soori

அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர் அப்படி தற்பொழுது காரில் இருந்தபடி சூரி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதில் கூலருடன் ஹீரோ போல் இருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

soori
soori

இவ்வாறு விடுதலை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும் நிலையில் இதனை அடுத்து மேலும் சில திரைப்படங்களை ஹீரோவாக நடிப்பாரான எதிர்பார்க்கப்படுகிறது இதோ அவருடைய புகைப்படம்

Leave a Comment