தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரின் தந்தையின் மீது பண மோசடி புகார் செய்த பரோட்டா சூரி.!! அட இவரா இப்படி என கேட்கும் ரசிகர்கள்.

actor soori cheated by producer and he failed case against them: பிரபல காமெடி நடிகர் பரோட்டா சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக சொல்லி 2.7 கோடி பணமோசடி செய்த தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மேலும் ரமேஷ் என்பவர் பிரபல நடிகரான விஷ்ணு விஷாலின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சூரிக்கு 40 லட்சம் சம்பள பாக்கி கொடுக்காமல் இருந்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். மேலும் அவர் கேட்க 2.7 கோடி தந்தாள் மூன்று கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கித் தருவதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சூரியும் 2.7 கோடி பணம் தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளார். அவரும் அந்த பணத்தையும் வாங்கிக் கொண்டு நிலத்தையும் தராமல், பணத்தையும் தராமல் ஏமாற்றி உள்ளார்.

மேலும் இந்த நிலையில் சூரி இதுகுறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் அவர்கள் இது குறித்து எந்த விசாரணையும் செய்யாததால் இவர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

Leave a Comment