சிம்பு, தனுஷை தொடர்ந்து சிக்ஸ் பேக் வைத்து வெறியேற்றும் சிவகார்த்திகேயன்.! எல்லாம் SK 21 படத்துக்காக தானா வைரலாகும் புகைப்படம்.

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் மாவீரன். மாவீரன் படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதேபோல் ஓடிடி வெளியாகி நல்ல ரீச்சை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தின் சூட்டிங்கில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த 11ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.

பிரின்ஸ் பட தோல்விக்கு பிறகு மாவீரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்க தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி 82 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது. இவ்வாறு இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இந்த படத்திற்கு எஸ்கே 21 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

இந்நிலையில் சிவகார்த்திகேயன் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ஹேர் ஸ்டைலை மாற்றி கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் இருக்கும் மங்கலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். எஸ்கே 21 படம் உண்மை சம்பவத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment