அடுத்தடுத்த ஐந்து படம்.. 200 கோடி பட்ஜெட்.. மிரட்டப் போகும் சிவகார்த்திகேயன்.!

Sivakarthikeyan Movie Update: சமீப காலங்களாக தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி டான் மற்றும் டாக்டர் போன்ற இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றினை கண்டது இதனை அடுத்து இவருடைய நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் படும் தோல்வினை சந்தித்த நிலையில் சமீபத்தில் வெளியான மாவீரன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து.

மார்க்கெட்டில் பெரிய அளவில் கொண்டு சென்றது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். அப்படி அந்த ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம். மாவீரன் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வேலைகள் நடைபெற்றது. ஆனால் சில தொழில்நுட்ப வேலைகள் மீதமிருந்த காரணத்தினால் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளி போனது.

ஏலியன் மற்றும் மனிதனுக்கும் இடையே இருக்கும் உறவை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் 100 கோடி என்று கூறப்படுகிறது சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல ரீச்சை பெற்றது.

இதனை அடுத்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் தனது 21வது  திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்   நடிக்க இருக்கிறார். இப்படத்தினை சிவா இயக்க கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஹிட் திரைப்படங்களை தந்து வரும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் இப்படம் மொத்தம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

இந்த படங்களை தொடர்ந்து தளபதி 68 படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வரும் வெங்கட் பிரபு விஜய் படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் உருவாக்க இருக்கிறார். இப்படத்தில் சிவாவும் இணைந்து பணியாற்ற இருக்கும் நிலையில் மொத்தம் 150 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது.

இவ்வாறு கோலிவுட்டியில் முன்னணி ஹீரோவாக கலக்கி வரும் சிவகார்த்திகேயன் பாலிவுட்க்கும் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். அப்படி இந்தியில் அறிமுகமாக இருக்கும் சிவகார்த்திகேயனின் படத்தின் பட்ஜெட் 200 கோடி என சொல்லப்படுகிறது விரைவில் இந்த படங்கள் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.