வளரும் நடிகரை பார்ப்பதற்கே பயந்த நடிகர் சிவகார்த்திகேயன் – பிரபல நடிகர் அதிரடி பேட்டி.!

உதயநிதி ஸ்டாலின் முதலில் இயக்குனர் அவதாரம் எடுத்திருந்தாலும் காலப்போக்கில் அவர் ஹீரோவாக தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதனால் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருந்து வருகிறார் மறுபக்கம் இவர் அரசியலிலும் ஈடுபட்டு தற்போது எம்எல்ஏவாக தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

தொடர்ந்து மூன்றிலும் கவனம் செலுத்தி வெற்றி கண்டு வருவர் உதயநிதி தான். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றி நடை கொண்டு வரும் திரைப்படம் கலகத் தலைவன். இந்த திரைப்படத்தில் உதயநிதியுடன் கைகோர்த்து கலையரசன், ஆரவ், நிதி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.

படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் உதயநிதி சந்தோஷத்துடன் இருக்கிறார் மேலும் தொடர்ந்து பேட்டியும் கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் சொன்னது..  அண்மைக்காலமாக ரெட் ஜெயிண்ட் மூவி நிறுவனம் படங்களை தயாரிக்காமல் விநியோகம் செய்வதில் கவனம் செலுத்துகிறது ஏனென்றால் இது தான் எளிதான காரியம்..

எங்கள் நிறுவனத்திற்கு முதலில் பெயர் வைத்தது கிருத்திகா தான்.. ரெட் ஜெயிண்ட் என்றால் சூரியன் என்ற பொருள் ஆரம்பத்தில் மதராசபட்டினம், விண்ணைத்தாண்டி வருவாயா, மைனா போன்ற படங்களை விநியோகம் செய்தோம். மைனா திரைப்படத்தை பொருத்தவரை கமலஹாசன் அந்த படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டு விழாவில் பேசியது தான் படத்திற்கு மிகப்பெரிய ஒரு விளம்பரமாக இருந்தது.

மேலும் பேசிய அவர் பெரும்பாலும் தரமான படங்களை தேர்வு செய்து விநியோகம் செய்கிறோம் சில சமயம் எனது கணிப்பு சரியாக இருக்கும் ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் கோப்ரா திரைப்படம் பார்த்த போது படத்தினுடைய நீளம் அதிகமாக இருப்பதால் சற்று குறைக்க சொன்னேன் ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து அதனை செய்யவில்லை பின்னர் படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற பிறகு படத்தின் நீளத்தை குறைத்தார்கள்.

சில சமயம் தனது கணிப்பு தவறாகவும் போய் உள்ளது உதாரணத்திற்கு டான் திரைப்படத்தை நண்பர்களுடன் பார்த்த போது யாருக்குமே சிரிப்பு வரவில்லை அதனால் படத்தின் நீளத்தை குறைக்கும்படி சிவாவிடம் கூறினேன் ஆனால் குறைக்கவில்லை படம் வெளிவதற்கு முன் எந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டாலும் நீளத்தை குறைத்து விட்டீர்களா என்று கேட்பேன் என நினைத்து பயத்தில் சிவா என்னை சந்திப்பதை தவிர்த்தார் ஆனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது சில காட்சிகளுக்கு மக்கள் இருக்கையில் இருந்து எழுந்து கைதட்டி ரசித்தார்கள் அங்கு எனது கணிப்பு தவறானது என கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment