முதல் முறையாக சென்சேஷனல் நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் சிவகார்த்திகேயன்..! கண்டிப்பா படத்தில் ரியாக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சமீபத்தில்  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் எதிர்பாராதவிதமாக திரைப்படத்தின் வசூல் 100 கோடிக்கு மேல் வென்று சாதனை படைத்தது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு மைல் கல்லாக அமைந்துவிட்டது.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் இது காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருப்பதாக விமர்சனம் செய்து வந்தார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் டான்.

இத்திரைப்படத்தை இயக்குனர் சிபிசக்கரவர்த்தி அவர்கள் இயக்கி வருவது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திலும் டாக்டர் திரைப்படத்தில் நடித்த அதே கதாநாயகியே நடித்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி  ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனமானது தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிட போவதாக முடிவு செய்துள்ளார்கள்.  மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  சென்சேஷனல் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பானது மிக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

rashmika mandana

Leave a Comment