ரஜினி பட வாய்ப்பை நிராகரித்த நடிகர் சிவகார்த்திகேயன்..? அவருக்கு பதில் நடிக்கப் போவது யார் தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  தமிழ் சினிமா உலகில் நம்பர் 1 ஹீரோவாக இருக்கிறார் இவர் தற்பொழுது தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் சீன்கள் அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது.

மேலும் ஜெயிலர் படத்தில் ரஜினி ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலானது இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க இருக்கிறாராம் அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் ஆனால் முதலில் இந்த படத்தில் ஒரு இளம் நடிகர் தான் ஹீரோ

அதன்படி ரஜினி தரப்பில் இருந்து சிவக்கார்த்திகேயனிடம் முதலில் பேச்சுவார்த்தை  நடத்த முடிவெடுத்ததாம் இதனை எடுத்து லைகா  நிறுவனம் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ரஜினி படத்தில் முழு நேரமாக நடிக்க போவதில்லை..  படத்தில்  20 நிமிடம் மட்டுமே வந்து போவார் கூறியிருக்கின்றனர்.

ரஜினி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நடிக்க விருப்பமாக இருந்திருந்தாலும் அவர் தற்பொழுது பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் கால்ஷீட் இல்லாததால் ரஜினி படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். இதனை எடுத்து ரஜினி நடிக்கும் படத்தில் அதர்வா ஹீரோவாக ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

Leave a Comment