4 நாட்களில் மட்டும் பிரின்ஸ் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.? நஷ்டத்தில் இருந்து தப்பித்த சிவகார்த்திகேயன்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் பிரின்ஸ் திரைப்படம் வெளியானது இந்த படத்தினை அனுதீப் இயக்கி இருந்தார் மேலும் இதனைத் தொடர்ந்து அதே நாளில் கார்த்திக் நடிப்பில் பி.எஸ் மித்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சர்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி போட்டி நிலவே வந்தது இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் மட்டும் கலவை விமர்சனத்தை பெற்றது. பொதுவாக இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் காமெடி காட்சிகள் நிறைந்து ரசிகர்களை கவரும் வகையில் அமையும் ஆனால் பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

எனவே முதல் நாள் வசூல் கொஞ்சம் மந்தமாக இருந்த நிலையில் நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனமும் வரவேற்பும் கிடைத்தது. மேலும் இதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றினை தொடர்ந்து அந்த லிஸ்டில் சர்தார் படமும் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் சர்தார் திரைப்படம் முதல் நாள் வசூல் மட்டுமே நான்கு கோடியை நெருங்கி இருந்தது.

பிரின்ஸ் திரைப்படம்  2.25 கோடி வசூலித்தது பிறகு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களில் அதிக வசூலை எட்டி உள்ளது. அதாவது இந்த நான்கு நாட்களில் சுமார் 24 கோடியை மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. இவ்வாறு குறைவாக வசூல் செய்து இருந்தாலும் இந்த படம் வெளியாகுவதற்கு முன்பு சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் ஆகியவை நல்ல விலைக்குப் போயிருந்ததால் இந்த படம் பெரிதாக வசூல் ரீதியாக தோல்வி அடையவில்லை இதனால் பல குழுவினர்கள் நஷ்டத்தை சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.

பிரின்ஸ் திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 34 கோடி வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியினை சந்திதுள்ளது.

Leave a Comment