விஜய் 65 வது படத்தில் இணைந்தாரா நடிகர் சிவகார்த்திகேயன்.! சூப்பர் தகவல் இதோ.

0

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை படைத்துள்ளார் டாப் நடிகர் விஜய்.

இவரின் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து. தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடத்தப்பட்ட இருந்த நிலையில் அதை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படபிடிப்பு ஜார்ஜியாவில் படக்குழு படத்தை எடுத்து வருகிறது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு  அனிருத் இசையமைக்கிறார் இவரது இசையில் ஏற்கனவே மாஸ்டர் படம் வேற லெவல் ஹிட் அடித்ததால் தற்போது இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவல் எதிரி உள்ளது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளார். இதன்மூலம் விஜய் படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் இணைகிறார். சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.