மறைந்த வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!!

0

actor sivakarthikeyan help vadivel balaji family: வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை இந்திரா காந்தி மருத்துவமனையில் இறந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இவர் இதில் பிரபலமடைந்ததை தொடர்ந்து  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைப்பார். இவர் நிகழ்ச்சியில் இருக்கும்போது யார் பேசினாலும் அதற்கு சரியாக கவுண்டர் கொடுத்து அனைவரையும் வாயடைக்க செய்வார்.

இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தனது கடின உழைப்பால் கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ள நிலையில் இவர் இறந்ததை முன்னிட்டு தற்போது ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வடிவேல் பாலாஜிக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜி குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.

இதனை தற்போது கலக்கப்போவது யாரு இயக்குனர் தாம்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.