தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கமல், ரஜினி, சூர்யா, சிம்பு, தனுஷ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தனது கடின உழைப்பை போட்டு தான் மென்மேலும் உயர்ந்து வருகின்றன. அந்த வகையில் சின்னத்திரை தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின்பு வெள்ளித்திரையில் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் உலக அளவில் பெருமளவு வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.
மேலும் தற்போது இவரது கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார் அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தின் பூஜை கடந்த மாதம் தொடங்கப்பட்டு தற்போது இந்த படத்தின் சூட்டிங் காரைக்காலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சிவகார்த்திகேயனை காண பல ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனும் ரசிகர்களுடன் ஜாலியாக கூடிப்பேசி புகைப்படமும் எடுத்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிவரும் டெக்னீஷியன்கள் போன்ற அனைவருடனும் சிவகார்த்திகேயன் சாப்பாடு பரிமாறி ஜாலியாக அமர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். இப்படி அனைவரிடமும் கலகலப்பாக இருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழையும் சேர்த்துள்ளார். ஆனால் இப்படிப்பட்ட நடிகரை மற்ற சினிமா நடிகர்கள் பெரிதும் வளர விட மாட்டார்கள் இது தெரிந்த ஒன்றுதான்.
மேலும் நடிகர் அஜித்தும் ஆரம்ப காலகட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் டெக்னீஷியன்கள் மற்ற வேலையாட்கள் போன்றவர்களுடன் கூடி அமர்ந்து சாப்பிட்டு வருவது மற்றவர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுப்பது போன்று மகிழ்ச்சியாக இருந்தவர். இந்த நிலையில் நடிகர் அஜித்தை போலவே தற்போது சிவகார்த்திகேயனும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது