புதிய சாதனை படைத்த தடகள வீராங்கனைக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்.! லைக்குகளை அள்ளிய புகைப்படம் இதோ.

சமீப காலமாக தமிழ்நாட்டில் இருந்து விளையாட்டு வீரர்,  வீராங்கனைகள் தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அளவில் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருச்சியை சேர்ந்த தடகள வீரர் தனலட்சுமி தற்போது தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.

மேலும் இவர் தடகளத்தில் 100 மீட்டரை வெறும் 11.39 நொடியில் ஓடி தங்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவில் அதிவேகமாக ஓடும் வீராங்கனையான ஹீமாதாஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

இச்செய்தியை தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து இதை பார்த்த பலரும் அவருக்கு தொடர்ந்து தனது வாழ்த்து தெரிவித்தனர் அவர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு பல நலத்திட்ட உதவிகளையும் செய்ய ரெடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இச்செய்தி இணையதளத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இவர் இது போன்ற பல திறமை உள்ளவர்களுக்கு மறைமுகமாக பல உதவிகளைச் செய்து வருகிறார் மேலும் தன்னால் முடிந்ததை கொடுக்கவும் ரெடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சினிமா துறையில் இருப்பவர் இது போன்ற பல திறமை உள்ளவர்களை வளர்ப்பது வருகின்றனர் அந்த வகையில் அஜித்,சசிகுமார் போன்றவர்களும் தன்னால் முடித்ததை செய்துள்ளனர்.