தாடி,மீசை என ஆள் அடையாளமே தெரியாமல் புது ஸ்டைலுக்கு மாறிய நடிகர் சிவகார்த்திகேயன்.! இது அவர் தானா என கேட்கும் ரசிகர்கள்.!

0

என்னதான் தற்பொழுது சின்னத்திரையில் நிறைய தொகுப்பாளர்கள் உருவாகி வந்தாலும் ஒரு காலத்தில் மக்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளராக திகழ்ந்தவர் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் என்றுதான் கூற வேண்டும்.அந்த வகையில் பார்த்தால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்காக பல ரசிகர்களும் வருவார்கள்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நண்பனாகவும் காமெடி நடிகனாகவும் நடித்து வந்தார். பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து தற்போது நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே போகிறது என்றுதான் கூறவேண்டும் இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என தகவல் கிடைத்துள்ளது ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது மேலும் டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் உடன் சிவகார்த்திகேயன் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் முன்பு இருந்தவர் போல் தெரியவில்லை பார்ப்பதற்கு தாடி,மீசை என ஆளே மாறி புது லுக்கில் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனா இது என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருவது மட்டுமல்லாமல் எதற்காக சிவகார்த்திகேயன் இப்படி மாறியுள்ளார்.

sivakarthikeyan8
sivakarthikeyan8

வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை இவர் நடிக்கும் திரைப்படத்தை பற்றி முன்பே கூறி விடுங்கள் என கூறி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் சிவகார்த்திகேயன் தாடி,மீசை வைத்ததற்கு முக்கிய காரணம் இருக்கும் அது என்ன காரணம் என்பது தான் தெரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.