துப்பாக்கி தோட்டாக்கள் தெரிக்க வெளியானது சிவகார்த்திகேயனின் அமரன் டீசர்…

Amaran Teaser: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசரை படக் குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் சிவகார்த்திகேயன் முதன் முறையாக ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க தேசப்பற்று நிறைந்த படமாக உருவாகி இருக்கும் இப்படத்தினை உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க சி.எச் சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கணேசனின் சூழ்ச்சி வலையில் சிக்கிய பாக்யா.. கழுத்தில் கத்தியை வைத்து அமிர்தா நிலாவை கடத்திச் சென்ற கணேஷ்… பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி..

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வெளியாக இருக்கும் அமரன் பட டீசரில் காஷ்மீரில் இந்தியாவிற்கு இடையே நடக்கும் அதிரடியான போர் காட்சிகள் ஒரு தலைவனாக இருந்து தன்னுடைய குழுவை எப்படி சிவகார்த்திகேயன் ஊக்குவித்து செல்கிறார் என பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.

அதேபோல அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என பாரதியார் பாடலையும் பாடிக்கொண்டு ராணுவ வீரர்கள் வண்டியில் செல்வது, சிவகார்த்திகேயன் யாரும் முகத்தை மறைக்கக்கூடாது இதுதான் இந்திய ஆர்மி முகம் என எதிரி நாட்டுக்கு காட்டுங்கள் என கூறுவது போன்ற வசனங்கள் ஆர்வத்தை ஏற்படுகிறது. இவ்வாறு உணர்ச்சிபூர்வமாக முழுக்க முழுக்க தனது சிறப்பான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தி உள்ளார் என்பது அமரன் பட டீசரில் தெரியவந்துள்ளது.

Exit mobile version