உனக்கு லவ்லி மென்!! எனக்கு என ஜிம்மில் புலம்பி தீர்க்கும் சிம்பு!! வைரலாகும் வீடியோ.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தின் மூலம் சிம்பு உடல் எடையை குறைத்து ரீஎண்ட்ரி கொடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்காக தனது உடலை கடின உடற்பயிற்சியின் மூலம் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாகி அழகாக உள்ளார்.

அதோடுமட்டுமல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன், மற்றும் பத்து தல போன்ற திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சிம்பு  அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு விடுவார்.

மேலும் இந்த நிலையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது பயிற்சியாளரை பார்த்து உனக்கு லவ்லி மேன்! எனக்கு எங்க லவ்லி!, என சொல்லி சகித்துக் கொள்கிறார் தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்பு மறைமுகமாக நயன்தாராவை உனக்கு விக்னேஷ் சிவன் கிடைச்சாச்சு எனக்கு எங்க என சொல்வது போல் உள்ளது என கூறுகின்றனர். அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment