விட்டதை பிடிக்க வெறித்தனமாக இறங்கிய நடிகர் சிம்பு..! இனிமேல் தானே ஆட்டம் ஆரம்பம்..!

actor simbu upcoming movie latest news: தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிம்பு இவர் ஆரம்ப காலத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களுமே மெகா ஹிட் தான். இப்படி பெயர் போன நமது நடிகர் சமீபத்தில் பல தயாரிப்பாளர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிவிட்டார்.

தற்போது இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சிம்பு வெறும் 30 நாட்களில் ஈஸ்வரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இதை தொடர்ந்து பல தயாரிப்பாளர்களும் சிம்புவை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் தற்போது சிம்புவை வைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே ஈஸ்வரன் திரைப்படம் தான். மேலும் நடிகர் சிம்பு ஏற்கனவே நடித்து பாதியில் கைவிடப்பட்ட மாநாடு திரைப்படத்தையும் தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்துள்ளாராம்.

மேலும் கன்னடத்தில் மெகா ஹிட்டடித்த திரைப்படமான மப்டி எனும் ரீமேக் திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

தற்போது சிம்பு மாநாடு திரைப்படத்தை முடித்ததற்கு பிறகு ஆக இந்த திரைப்படத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவ்வாறு வெளிவந்த செய்தியும் மூலமாக சிம்பு ரசிகர்களின் எதிர் பார்ப்புகள் மிகவும் அதிகரித்துவிட்டது.

simbu
simbu

Leave a Comment