பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க.. யார் காரணம் தெரியுமா.?

விவரம் தெரியாத வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக ஆரம்ப காலத்தில் அவரது அப்பாவுடன் இணைந்து மாஸ் டயலாக் பேசி தனது திறமையை காட்டியும் அசத்தினார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து காதல், ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்த நடிகர் சிம்பு சில சர்ச்சைகளில் சிக்கி சில வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

இதனால் இவருக்கு பின்னிருந்த நடிகர்கள் பலர் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றனர். இதை உணர்ந்துகொண்ட சிம்பு தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் தனது எண்ணங்களையும் உடல் எடையையும் குறைத்து தற்போது புதிய அவதாரம் எடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து நடிகர் சிம்பு கையில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார்  போன்ற பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்பு சின்னத்திரை தொகுப்பாளர் பணியை செய்ய ரெடியாக களமிறங்கியுள்ளார் சமீப காலமாக உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் தற்போது கமலுக்கு அடுத்தடுத்த வேலைகள் தொடர்ந்து இருக்கின்ற காரணத்தினால் வேறு வழியில்லாமல் கடந்த வாரமே பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியை முடித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அவருக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் அல்லது சாரத்குமார் இவர்கள் தான் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருந்தது ஆனால் திடீரென நடிகர் சிம்புவை களம் இறங்கியது பிக்பாஸ் அல்டிமேட்.

எப்படி சாத்தியமானது என்பது குறித்த தகவல்கள் வெளிவருகின்றன ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து வருபவர் பிரதீப் மில்ராய் பீட்டர். சிம்புவின் நெருங்கிய நண்பர் இவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நடிகர் சிம்புவை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது சிம்புவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல நடிகர்களை உள்ளேயே அனுப்பியுள்ளார்.

இதனால் அவருக்கு இந்த வாய்ப்பை அவரது நண்பர்  பிரதீப் மில்ராய் பீட்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எப்படியோ சிம்பு எதை செய்தாலும் செம்மையாக செய்வார் எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்க போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Leave a Comment

Exit mobile version