செம ஸ்டைலிஷாக காலேஜ் பையன் போல் இருக்கும் சிம்பு.! நியூ லுக் புகைப்படம்..

சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் சிம்பு தற்பொழுது காலேஜ் பையனாக மாறி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவருடைய நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை கண்ட நிலையில் தற்போது இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்களும் வெற்றியினை கொடுத்ததால் அடுத்ததாக சிம்பு கமல் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து இளம் நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் சிம்புவின் 48வது திரைப்படத்தினை தயாரிக்க இருக்கும் நிலையில் இதனை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் குண்டாக இருந்த சிம்பு மாநாடு திரைப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து மிகவும் பிட்டாக மாற்றுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் மேலும் மெலிந்து சின்ன பையன் போல் காட்சியளித்தார்.

simbu 2

இந்நிலையில் தன்னுடைய 48வது படத்திற்காக தயாராகி வரும் சிம்பு செம ஸ்டைலாக மாறி உள்ளார் எனவே இந்த படத்திற்காக தற்பொழுது லண்டன் சென்றுள்ள சிம்பு பல பகுதிகளை சுற்றிப் பார்த்து வருகிறார். அப்படி சிம்பு எடுத்துக்கொண்ட நியூ லுக் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இவருடைய ஸ்டைலிஷை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இருக்கின்றனர்.

simbu 1

மீண்டும் பழைய தலைவனை பார்த்து விட்டதாகவும் சிலர் கமெண்ட் செய்து வரும் நிலையில் விரைவில் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. எனவே இதற்காக மார்ஷியல் கலையை சிம்பு கற்றுக் கொண்டிருக்கிறார். இந்த படம் வேற லெவலில் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.  இவ்வாறு சிம்புவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

simbu

Leave a Comment

Exit mobile version