தயாரிப்பாளரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய சிம்பு.! திரும்ப வந்துட்டேன்னு நிரூபித்துக் காட்டிவிட்டாரே

0

சினிமாவிலேயே நல்ல கதை உள்ள பல படங்களின் வாய்ப்பை வேண்டாம் என்று கூறியவர் சிம்பு என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் சிம்பு கதை சரியில்லை என வேண்டாம் என்று கூறி அந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் பிரபலம் அடைந்து உள்ளார்கள் அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும்.

அதோடு மட்டுமல்லாமல் இவர் ஒரு படத்தில் கமிட்டானால் அந்தப் படத்தை முழுமையாக முடித்து கொடுப்பதற்க்குள் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்று அனைவரும் படாதபாடு பட வேண்டியது இருக்கும்.

இதன் காரணமாகவே இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது குறைந்தது. அதோடு மட்டுமல்லாமல் பல காதல் சர்ச்சைகளிலும் மாட்டிக்கொண்டு சின்னாபின்னம் ஆனார். இப்படிப்பட்ட ஒரு நிலையில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட சிம்புவை தற்பொழுது திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் தலை மேல் தூக்கி வைத்து ஆடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது தான் சிம்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சிம்பு நடிப்பில் கடைசியாக ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸானது. இந்தப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடித்து விட்டாராம். இதனைத் தொடர்ந்து தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

maanadu
maanadu

மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு தொடங்கியது. முதலில் சிம்பு நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு பிறகு நடிக்க முடியாது என்று கூறியிருந்தார். எனவே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா தொடங்காத என்று குழப்பத்தில் இருந்து வந்தார்கள்.

பிறகுதான் சிம்பு நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். அதோடு தற்போது எல்லாம் சிம்பு படப்பிடிப்பு என்றால் சரியான நேரத்திற்கு போய் படப்பிடிப்பில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம்.  எனவே இப்படி சிம்பு மாறிவிட்டாரே என்று ஆச்சரியத்துடன் கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

அதோடு தற்பொழுது மாநாடு திரைப்படம் ரிலீசாக உள்ளது.அதோடு சிம்புவின் மீதும் முன்பு இருந்த சர்ச்சைகள் அனைத்தும் நீங்கி நல்ல பெயர் எடுத்து விட்டார் என்று ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து.