தனுஷ் நடிகையிடம் பரதநாட்டியம் கற்றுகொள்ளும் சிம்பு.! வைரலாகும் புகைப்படம்

actor simbu learning classical dance to famous actress photo viral: நடிகர் சிம்பு தற்போது ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் சிம்பு கழுத்தில் பாம்புடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியாக மாறி  ரசிகர்களை கவர்ந்தார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு தனது  உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்து உள்ளதாக தெரியவருகிறது. இவருக்கு ஜோடியாக ஜெயம் ரவியின் பூமி திரைப்படத்தின் நடிகையான நிதி அகர்வால் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு அவர்கள் வெண்ணிலா கபடி குழு, தனுஷின் யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை சரண்யா மேனனிடம் பரதநாட்டியம் கற்றுக் கொண்டு வருகிறார் என தெரிய வந்துள்ளது. அவர் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் அந்த புகைப்படம் இணையத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

simbu
simbu

Leave a Comment