பார்திபன்னுடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலா.! குதுகலம் அடையும் ரசிகர்கள்.

0

நடிகர் பார்த்திபன் சினிமா உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இவ்வாறு தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பலவிதமான திறமையை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

இவர் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை மாற்றக் கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இவர் நடித்த உள்ளே வெளியே ,புதிய கீதை ,இவன், ஹவுஸ்ஃபுல் ,குடைக்குள் மழை ,வித்தகன் போன்ற போன்ற பல படங்களை இயக்கி நடித்து பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் உங்களின் படங்களின் இரண்டாம் பாகத்தில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேட்டார் அதற்கு பதிலளித்த நடிகர் பார்த்திபன் என்னுடைய உள்ளே வெளியே படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறினார்.

மேலும்  இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதுதவிர சிம்புவை ஒரு புதிய படத்தில் கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரியவருகிறது.