ரசிகர்களை பார்த்ததும் யூ டர்ன் போட்டு அலறியடித்துக்கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கே சென்ற சிம்பு.!! வைரலாகும் வீடியோ..

0

actor simbu in shoouting spot at airport video viral: நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்காக சிம்பு அதிரடியாக தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனென்றால் சிம்பு உடல் எடை அதிகரித்ததால் இதற்கு முன் உள்ள திரைப்படங்களில் சரியாக நடனம் ஆட முடியாமல் படம் தோல்வியை சந்தித்தது எனவும் சிம்பு பழையபடி மாசாக இல்லை எனவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.

மேலும் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த நாளில் சிம்பு இந்த திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க காசு மற்றும் வேஷ்டி வழங்கி கௌரவ படுத்தினார், ஈஸ்வரன் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு தற்பொழுது மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார்.

அதற்காக பாண்டிச்சேரி விமான நிலையத்தில் வெளியே வந்த சிம்பு ரசிகர்கள் கேமராவுடன் நிற்பதை கண்டதும் தன்னுடைய புதிய கெட்டப் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக யு ட்ரன் போட்டு மீண்டும் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.