ஈஸ்வரன் படபிடிப்பில் இருந்தவர்களுக்கு சிம்பு கொடுத்த அன்பு பரிசு.! வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார். இவர் தற்போழுதும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு முழுமையான வெற்றியை தரவில்லை ஏனென்றால் இவர் நடித்திருந்த ஒருசில படத்தில் இவர் எடை மிகவும் அதிகமாக கூடி இருந்ததால் இவரது ரசிகர்கள் அதிகம் இவரை கவரவில்லை.

இந்நிலையில் இவர் கேரளா சென்று தனது உடல் எடை முழுவதும் குறைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதேசமயம் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே சிம்புக்கு அடுத்ததாக பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்த பிரச்சனைகள் எல்லாம் தாண்டி இவர் இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில்.

தற்போது இவர் இந்த படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு சிம்பு ஒரு கிராம் தங்கமும் வேஷ்டி சேலை இனிப்புகள் போன்றவைகளை தீபாவளியை முன்னிட்டு வழங்கியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

simpu
simpu

Leave a Comment