சிம்புவின் மீது நம்பிக்கை வைத்து மன்மதன் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மறைவு!! சிம்பு வருத்தம்.

0

actor simbu condolence to his manmathan movie producer: இந்த 2020 இல் பல திரைப்பிரபலங்கள் தொடர்ந்து இறந்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பெரும் வருத்தத்தில் உள்ளனர். அந்த வகையில் தனுஷின் திருடா திருடி படத்தை தயாரித்த கிருஷ்ணகாந்த் அவர்கள் காலமானார்.

அதைத்தொடர்ந்து சிம்புவின் மன்மதன், விக்ரமின் கிங், தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்,  துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்திருந்தார். இந்த கிருஷ்ணகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் எனும் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்தார்.

இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு போவதற்கு முன்பே அவருக்கு உயிர் பிரிந்து விட்டது என கூறுகின்றனர். அதோடு இவருக்கு வயது 52 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிருஷ்ணகாந்த்திற்கு லக்ஷ்மி என்ற மனைவியும் சந்திரகாந்த. உதய காந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்பு அவர்கள் வெளியிட்ட இரங்களில் நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். மன்மதன் படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களை கொண்டது என் மீது அன்பு கொண்டவர் கிருஷ்ணகாந்த். மேலும் என் மீது நம்பிக்கை கொண்டு மன்மதன் படத்தை இயக்க சொன்னவர். அவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து இவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும் எனவும் கூறியுள்ளார். இவரின் இறப்பிற்கு திரைப் பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதி சடங்கு இன்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள இடுகாட்டில் நடக்க உள்ளதாக தெரிய வருகிறது.