சம்பளத்தில் சூர்யாவையே பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்.. இப்ப வந்தவருக்கு இவ்வளவா..

0

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்கு  அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த எட்டு வருடங்களாக வளர்ந்து வரும் நடிகர்கள் லிஸ்டில் இருந்தார்.இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தற்பொழுது தனுஷ் போன்ற இரண்டாம்கட்ட முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் ஏராளமான முன்னணி நடிகர்களை ஓவர்டேக் செய்து அஜித், விஜய், ரஜினி ஆகியோர்களுக்கு அடுத்த நடிகர் இவர்தான் இருந்து வருகிறாராம். அதாவது சம்பளத்திலும் சரி ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு தான் அதிக மவுசு இருந்து வருகிறதாம் சமீப சில வருடங்களாகவே இவர் தான் அதிகப்படியான சம்பவங்களை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக நடித்துவந்த சூர்யா இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் தற்போது மூன்றாம் கட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அதோடு சிவகார்த்திகேயனை விடவும் மிகவும் குறைவாகவும் சம்பளம் வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.

அந்தவகையில் சில ஆண்டுகளாக தனது மார்க்கெட்டை இழந்த சூர்யாவை விட சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஏனென்றால் காமெடி நிறைந்த திரில்லர் படமாக அமைந்ததால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

ஏனென்றால்,தற்போது குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு படங்கள் பெரிதாக அமையவில்லை ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் குடும்பத்துடன் சென்று திரை அரங்குகளில் பார்க்கலாம்.

இந்நிலையில் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் சமீப பேட்டி ஒன்றில் சூர்யாவை விடவும் சிவகார்த்திகேயனுக்கு தான் மார்க்கெட் அதிகமாக  இருக்கிறது என்று கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் 25 வருடமாக சினிமாவில் உழைத்து வரும் சூர்யாவை சிவகார்த்திகேயனுடன் ஒப்பிடுவது சரிதானா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்