பாலிவுட்டை மீட்டெடுக்க திடீரென களமிறங்கிய நடிகர் ஷாருகான்..! அடேங்கப்பா முன்பதிவே மூச்சு முட்டுதே..!

0
sharukhan
sharukhan

சமீப காலமாக பாலிவுட் நடிகர்களின் திரைப்படங்கள் படுதோல்வி அடைந்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அந்த வகையில் டாப் நடிகர்களின் திரைப்படங்களை ரசிகர்கள் பாய் காட் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தலை தூக்கி வருவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் சாருக் கான் சமீபத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள பதான் திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருவதை நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சில ஆண்டுகளாகவே ஷாருக்கான் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாமல் இருந்து வந்தது தான் காரணம் அந்த வகையில் பதன் திரைப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து  ஷாருக்கான் பல்வேறு சர்ச்சைகள் சிக்கி வந்துள்ளார் அந்த வகையில் பதான் திரைப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனன்  மற்றும் டெம்பிள் கபாடியா ஜான் ஆபிரகாம் போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன் அவர்கள் அணிந்துள்ள ஆடை மிகவும் வைரலாக பேசப்பட்டது மட்டும் இல்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது அந்த வகையில் தளபதி விஜய் அவர்கள் தமிழ் பதிப்புக்கான ட்ரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் இதற்கான முன்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் ஷாருக்கானின் இந்த திரைப்படத்திற்கு சமூக வலைதள பக்கத்தில் டிக்கெட்டுகள் குவிந்த வண்ணம் இருப்பது மட்டுமில்லாமல் முன்பதிவு டிக்கெட் அதிகளவு விற்பனை ஆகி உள்ளது இந்நிலையில் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் கூட ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்திற்கான டிக்கெட் விலை கிட்டத்தட்ட சுமார் 2200 வரை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் முதல் நாள் நள்ளிரவில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 10 கோடி வரை  கலெக்ஷன் அல்ல அதிக அளவு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்கள். அந்த வகையில் ஷாருக்கானின் இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் அவை மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும் என கூறுகிறார்கள்.

மேலும் இதன் மூலமாக பாலிவுட் சினிமாவை  ஷாருக்கான் அவர்கள் எளிதில் மீட்டெடுப்பார் என  பலரும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருவது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மீது எல்லா மொழி ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.