நடிகர் சென்ராயன் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக இந்த வேலையை தான் செய்து வந்தார்.!

0

காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சென்ராயன். இவர் தனது நடிப்புத் திறமையினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவ்வாறு இவர் பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் படம் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தான் காமெடி நடிகராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் சென்ராயன் ஒரு பேட்டியில் சில சுவாரசியமான விஷயங்களை கூறி இருந்தார். அதாவது இவர் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே ரியல் எஸ்டேட் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அந்த நிலையில் இவருடைய ஓனர் பொல்லாதவன் திரைப்படத்தை பார்ப்பதற்காக 200 டிக்கெட்களை தனது குடும்பத்தினருக்காக வாங்கி வைத்திருந்தாராம்.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியூர் செல்ல நேர்ந்தால் அந்த 200 டிக்கெட்களையும் என்னிடம் கொடுத்து உன் நண்பர்களுடன் போய் பார் என்று கூறி கூறினாராம்  நான் உடனே தன் நண்பர்களை அழைத்து டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டு மீந்த அனைத்தையும் பத்தராமாக எடுத்துக்கொண்டு என்னுடைய படத்திற்காக நானே  டிக்கெட் விற்றேன் அது எனக்கு பெருமையாக இருந்தது என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருந்து கொண்டிருக்கும் போது இவரின் மனைவி கர்ப்பமாக இருந்தார் என்பது இவருக்கு தெரிய வந்தது இந்த விஷயம் நம் அனைவருக்கும் தெரியும். நிலையில் தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.