பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா உலகில் இதுவரை எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான். கடைசியாக 2.0 என்னும் படத்தை எடுத்திருந்தார் அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து ஷங்கர் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தினார்.
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ஆனால் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு அப்பொழுது நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு லைக்கா தயாரிப்பு நிறுவனம் பிரச்சனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் படத்தை ஆரம்பிக்க சொன்னது.
ஒரு வழியாக சொன்னபடி தற்போது ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் கமலுடன் சேர்த்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஒரு சிலர் கமிட் ஆகி ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அவர்கள் திடீரென கொரோனா தொற்று மற்றும் உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் இயற்கை எழுதினார்.
அந்த வகையில் இந்த படத்தில் நடித்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியவர்கள் இயற்கை எய்தினர் அவர்களுக்கு பதிலாக முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க படக்குழு திட்டம் போட்டு வருகிறது அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் நெடுமுடி வேணு கேரக்டருக்கு சத்யராஜ் பொருத்தமாக இருப்பார் என படக்குழு முடிவு செய்துள்ளது.
கமலின் காக்கி, சட்டை விக்ரம் ஆகிய படங்களில் சத்யராஜ் வில்லனாக மிரட்டி இருந்தார் அதனால் இந்தியன் 2 படமும் அவருக்கு சூப்பராக பொருந்தும் என கருதி சத்யராஜ் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தியன் 2 படத்தின் கதையை கேட்டு மகிழ்ந்து போன நடிகர் சத்யராஜ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கோடி அவர் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
அவரது கால் சீட் 15 நாட்கள் தேவைப்படுகிறது அதனால் அவருக்கு 15 கோடி கொடுக்க வேண்டிய சூழல் போகிறதாம் இதனால் தயாரிப்பு நிறுவனம் சற்று யோசிக்கிறதாம் சற்று சம்பளத்தை குறைத்துக் கொண்டால் சத்யராஜ் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது மீண்டும் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.