பருத்திவீரன் சித்தப்பாவை அழவைத்த பிக்பாஸ் டாஸ்க்.! வைரலாகும் வீடியோ

0

Actor Saravanan – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் சரவணன் தனது குழந்தை பற்றி உணர்ச்சிகரமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று காலை வெளியான முதல் புரமோஷன் வீடியோவில் கவின் வாயை மூடி பேச வேண்டு என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. 2வதாக வெளியான வீடியோவில் புதிதாக வந்த மீராவை அபிராமி தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்வது போன்ற காட்சிகள் வெளியானது.

தற்போது 3வது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், நடிகர் சரவணன் ‘என் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. எனவே, வெறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். முதல் மனைவிதான் எனக்கு எல்லாம் கொடுத்தாள். அவள் பணத்தில்தான் சாப்பிட்டேன். குழந்தைக்காக தற்போது ஒரு வாழ்க்கையை துவங்கியுள்ளேன்’ என அவர் உணர்ச்சிகரமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.