சாந்தனு வெளியிட்ட மரண மாஸ் புகைப்படம்.! கே ஜி எஃப் யாஷ் கெட்டப் என கூறும் ரசிகர்கள்..

நடிகர் சாந்தனு தமிழ் சினிமாவில் 1998 ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், இவர் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் ஆவார், சாந்தனு 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடனக் கலைஞரும் கூட. தற்பொழுது இவர் தனக்கென ஒரு நடன பயிற்சி கூடத்தை வைத்து திறமையாக நடத்தி வருகிறார்.

இவர் தளபதி நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், மாஸ்டர் திரைப்படத்தில் சாந்தனு கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என சமீபத்தில் தகவல் வெளியானது, இந்த நிலையில் சாந்தனு தனது முழு தோற்றத்தையும் மாற்றி அடையாளமே தெரியாமல் தாடி மற்றும் குடுமியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக தளத்தில் வைரலாகி வருகிறது, இதைப் பார்த்த ரசிகர்கள் கேஜிஎப் யாஷ் போல் தோற்றத்துடன் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.

shanthanu
shanthanu

Leave a Comment