ஹீரோவான பிறகு சந்தானாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

0

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தனது விடா முயற்சியினால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இதன் மூலம் சினிமாவில் பிரபலமடைந்தவர் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்குபெற்ற தற்பொழுது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்து கலக்கி வருபவர் நடிகர் சந்தானம்.

பொதுவாக கலைஞர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் தேடி போக அவர்களின் கடின உழைப்பு இருந்தால் மட்டுமே அவர்களால் சினிமாவில் பிரபலமடைய முடியும் அந்த வகையில் தான் சந்தானமும் தனது விடாமுயற்சியினால் சினிமாவில் வளர்ந்துள்ளார்.

அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து கலக்கி வந்த இவர் தற்போது ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று ஒரு முடிவை எடுத்து சில ஆக்ஷன் நிறைந்த காமெடி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்.

இவர் ஹீரோவாக நடித்தாலும் காமெடி நடிகராக ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார். அதோடு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வரும் இவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.

காமெடி நடிகராகவும் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்த இவர் ஹீரோவாக நடித்து வருவதால் தனது சம்பளத்தையும் இரு மடங்காக உயர்த்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 3.4 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.