நடிகர் சந்தானம் தற்போது வாங்கும் சம்பளம்.! ஏகே62 திரைப்படத்தில் நடிக்க எத்தனை கோடி தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் சந்தானம் தமிழில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

இவர் காமெடியனாக நடிக்கும் போது தற்போது உள்ள முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் தோல்வி அடைந்தது அதனைத் தொடர்ந்து குளுகுளு திரைப்படமும் இவருக்கு தோல்வியை தான் சந்தித்தது.

இதனை தொடர்ந்து தற்போது சந்தானம் நடிப்பில் கிக் என்ற ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் இன்னும் பல திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளது. இப்படி படங்களில் பிசியாக இருக்கும் சந்தானம் அவர்கள் தற்போது வாங்கும் சம்பளம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் சந்தானம் அவர்கள் இதுவரைக்கும் குறைந்த சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த சந்தானம் அவர்கள் தற்போது கமிட் ஆகியுள்ள சில பல திரைப்படங்களில் 5 கோடி சம்பளமாக பெற இருப்பதாக தகவல்  வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த ஐந்து கோடியும் சிங்கிள் பேமென்ட் ஆக மட்டும் தான் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் அவர்கள் இத்தனை நாட்களாக ஹிரோவாக நடித்து வந்த இவர் அஜித்திற்காக ஏ கே 62 திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது உறுதி செய்யப்பட்ட தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சந்தானம் அவர்கள் 7 கோடி வரை சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment