ஒரு படத்தில் நடிப்பதற்கு எஸ்.ஜே. சூர்யா இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா.? அடி ஆத்தே இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் எஸ்.ஜே. சூர்யா இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் அந்த அளவிற்கு இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமாவில் நிறைய திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அதே அளவிற்கு இவரும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவ்வாறு இவர் நடித்த திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதிலும் குறிப்பாக இவர் ஹீரோவாக நடித்ததை விட வில்லனாக நடிக்கும் பொழுது ரசிகர்களுக்கு இவரை இன்னும் பிடித்து விடுகிறது.

அந்த வகையில் பார்த்தால் இவர் சமீப காலமாகவே வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது நிறைய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா அவர்கள் ஒரு திரைப்படத்திற்கு நடிக்க எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். பொதுவாகவே இவர் கதாநாயகனாக நடித்ததை விட வில்லனாக நடிக்கும் பொழுது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடுவதால் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறார்.

மேலும் இவரது சம்பளம் இவ்வளவு தான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும் பல ரசிகர்களும் இது இவருக்கு கொடுக்கப்பட வேண்டிய சரியான சம்பளம் தான் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் அனைத்தும் நாங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறோம் என்றும் கூறி வருகிறார்கள்.

sj surya
sj surya

இதனைத்தொடர்ந்து பார்த்தால் இவர் தனது அடுத்த அடுத்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டே போகிறாராம். குறிப்பாக ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் உடனே அடுத்த திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி வருகிறாராம். அந்த அளவிற்கு நமது நடிகர் எஸ்.ஜே. சூர்யா பிஸியாக இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment