நிக்கவே தெம்பில்லாமல் இருந்த ரோபோ சங்கரா இப்படி நடனம் ஆடுவது.! வைரலாகும் வீடியோ

0
robo-shankar
robo-shankar

விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த பல நட்சத்திரங்கள் தற்பொழுது ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சந்தானம் சிவகார்த்திகேயன் ரோபோ சங்கர் என பலரைக் கூறிக் கொண்டே போகலாம், ரோபோ சங்கர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

பிறகு தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் காமெடியனாகவும் குணசத்திர வேடத்திலும் ரோபோ சங்கர் நடித்து வருகிறார். ஆனால் இவரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஏனென்றால் அந்த புகைப்படத்தில் ரோபோ சங்கர் மிகவும் ஒல்லியாக எழுந்திருக்கவே முடியாமல் நிற்க முடியாமல் மிகவும் நோய் வாய் பட்டது போல் ஒல்லியாக இருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு என அதிர்ச்சி அடைந்தார்கள் அது மட்டும் இல்லாமல் சில காலமாகவே ரோபோ சங்கர் மிகவும் ஒல்லியானதாக இருக்கும் புகைப்படமும் வெளியானது.

ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு காரணம் மது தான் எனவும் அதனால் இவருக்கு உடல்நிலை பாதித்ததாகவும் பாய்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார் இந்த நிலையில் தற்பொழுது ரோபோ சங்கர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோபோ சங்கர் நடனமாடி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் வந்துட்டியா தலைவா உனக்கு சரியாயிடுச்சா என நலம் விசாரித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் நடனமாடிக் கொண்டே கடைசியில் ரோபோ சங்கர் தடுமாற்றம் அடைகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் நீங்க இன்னும் பழைய நிலைமைக்கு வரல கண்டிப்பா பழைய நிலைமைக்கு வந்துவிடுவீர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.