முதன்முறையாக யாஷிகாவுடன் இருக்கும் உறவு குறித்து நடிகர் ரிச்சர்டின் பதிவு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அதன் பிறகு நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இவ்வாறு நடிகை ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதரரும் இருக்கிறார்கள். ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் அஞ்சலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.

மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்த நிலையில் பிறகு வீர சிவாஜி திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் உடையவர்.

இவ்வாறு இவர்களைத் தொடர்ந்து சகோதரர் ரிச்சர்ட் ரிஷி சினிமாவில் பிரபலமான ஹீரோ தான் ஆனால் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது.

இவ்வாறு இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் மோகன் ஜி உடன் இணைந்து ரிச்சர்ட் ரஷி புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். மேலும் தற்பொழுது இவர் யாஷிக் ஆனந்துடன் புதிய படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில் அங்கு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

richart rishi
richart rishi

எனவே பலரும் இவர்கள் காதலித்து வருவதாக கூறிவந்த நிலையில் தற்பொழுது ரிச்சர்ட் ரிஷி ஷூட்டிங் என்பது எடுக்கப்பட்ட யாஷிகாவின் புகைப்படத்தை வெளியிட்டு க்யூட் என பதிவிட்டுள்ளார். இவ்வாறு இருவரும் ஒன்றாக நடிப்பதன் காரணத்தினால் தான் இவர்கள் நெருக்கமாக ஊர் சுற்றி வரும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பது உறுதியாகி உள்ளது.

Leave a Comment