ஷங்கரை தொடர்ந்து மற்றொரு தமிழ் இயக்குனருடன் கைகோர்க்க ரெடியான நடிகர் ராம்சரண் – யாருடன் தெரியுமா.?

ram-charan
ram-charan

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சிறப்பான பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான மகதீரா, RRR போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. RRR படத்தை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல்முறையாக கைகோர்த்து தனது 15-வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் ராம் சரண்.

இந்த படத்தில் கியாரா அத்வானி ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகை அஞ்சலி வில்லி கதாபாத்திரத்திலும் மற்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. தொடர்ந்து ராஜமௌலி சங்கர் படங்களை கைப்பற்றி நடித்து வரும்  ராம்சரன் அடுத்ததாக இளம் இயக்குனர் ஒருவருடன் கைகோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது அவர் வேறு யாருமல்ல இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

காரணம் லோகேஷ் கனகராஜ் அண்மைக் காலமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து அசத்தியது இதுவரை 270 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வெகுவிரைவிலேயே 300 கோடியைத் தொட்டுவிடும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்  கமல் ஆகியோர் ஹைதராபாத் சென்றுள்ளனர் அப்பொழுது சிரஞ்சீவி வீட்டிற்கு சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதற்கு மற்றொரு காரணம்  லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ராம்சரணுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி என்றால் லோகேஷ் தளபதி 67 படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ராம்சரண் உடன் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது அதே போல ராம்சரணும் சங்கர் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் உடன் இணைவார் என கூறப்படுகிறது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என சொல்லப்படுகிறது.