அஜித் பாணியில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் ராமராஜன்..! இவுங்க கரகாட்டம் இங்க கலகட்டுமான்னு தெரியலையே..!

0
ramarajan
ramarajan

தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ஆனது ரிலீசான சுமார் ஏழு நாட்களில் மட்டும் 200 கோடி வரை வசூல் செய்து உலக அளவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது அந்த வகையில் தல அஜித் இந்த திரைப்படத்தில் பல்வேறு மாஸ் வாசனங்களை கூறியுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் தரமாகவும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் அளவிற்கு மிக மாசாக எடுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் துணிவு திரைப்படுத்துடன் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் போட்டியிட்ட நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் மட்டுமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

அந்த வகையில் வங்கி கடன் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை பற்றி இந்த திரைப்படம் மிக பக்காவாக பொருந்தியது அது மட்டும் இல்லாமல் பணத்தை காலடியில் வைத்து பார்க்க வேண்டும் இதைவிட அவற்றை நாம் தலைமையில் தூக்கி வைத்தால் அவை நம்மை ஆண்டு விடும் என்பதை துணிவு திரைப்படத்தின் மூலம் வினோத் அவர்கள் மிக தெளிவாக கூறியுள்ளார்.

இவ்வாறு இதே போன்ற கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் என்பதில் வெற்றி விழா நாயகன் என போற்றப்படும் நடிகர் ஒருவர் ரிஎன்ட்றி கொடுக்க உள்ளார் பொதுவாக கிராமத்து கதாபாத்திரம் கொண்ட திரைப்படம் பலவற்றில் நாயகனாக நடித்த பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் கொடுத்த ராமராஜன் தன்னுடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் சுமார் 50 நாட்களாவது திரையரங்கில் ஓட செய்து விடுவார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் என்ற திரைப்படம் சுமார் 200 நாட்களைக் கடந்தது மிகப்பெரிய சாதனையாக அமைந்தது அந்த வகையில் அவர் திடீரென அரசியலில் புகுந்ததால் சினிமாவில் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது பின்னர் துணை நடிகர் கதாபாத்திரமே அவருக்கு கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

அந்த வகையில் சாமானியன் என்ற டைட்டில் உள்ள ஒரு திரைப்படம் உருவாக உள்ளது இந்த திரைப்படத்தின் டீசர் கூட சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி பேசப்பட்ட நிலையில் அந்த திரைப்படத்தில் எம் ஆர் ராதா எம் எஸ் பாஸ்கர் போன்றவர்கள் இடம்பெற்று இருந்தார்கள் அதில் துப்பாக்கியுடன் மூவரும் இணைந்து நூலகத்தில் காப்பாளரை சுடுவது போல் ஒரு டீசர் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ராமராஜன் அவர்கள் ஒரு பங்களா வீடு கட்டி வருவதாகவும் 20 மாடுகளை வளர்க்கும் விவசாயி போல் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அப்பொழுது அவர் வங்கியில் வாங்கிய கடனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனை மற்றும் சாமானிய மக்களுக்கு நடக்கும் மோசடி போன்றவற்றை இந்த திரைப்படத்தின் மூலம் வெளிக்காட்ட போவதாக தெரியவந்துள்ளது மேலும் இந்த திரைப்படம் அஜித்க்கு கை கொடுத்தது போல் இவருக்கும் கை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.