இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் ரகுமான் மகள்களை பார்த்துள்ளீர்களா.! அழகு அள்ளுதே

raguman
raguman

புது புது அர்த்தங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ்  சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் ரகுமான். இவர் ஹீரோவாகவும், துணை நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமடைந்தவர். இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்த பிரபலமடைந்தார்.

இவர் தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வந்தாலும் 80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கொடி கட்டி வாழ்ந்து வந்தார். பொதுவாக ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் தங்களது தந்திரத்தினால் தொடர்ந்து வயதானாலும் கூட சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடிக்கமுடியும் மற்ற நடிகர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோவாக நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காது.

அந்தவகையில் ரகுமானும் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் தரமான கதை மற்றும் நல்ல கதாபாத்திர இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில்  இவர் துருவங்கள் 16,  குற்றமே தண்டனை,36 வயதினிலே உள்ளிட்ட நல்ல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

தற்போழுய முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய் போன்றவர்களை போல் இவரும் தனது குடும்பத்தினை பெரிதாக வெளிப்படுத்தவில்லை அதுவும் முக்கியமாக மகள்களை இதுவரையிலும் யாருக்கும் தெரியாத அளவிற்கு வளர்த்து வருகிறார்.

ஆனால் இவரின் மனைவி இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மனைவியின் சகோதரி என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் தற்போது தான் ரகுமான் குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகான மகள்கள் உள்ளார்களா என கூறி வருகிறார்கள்.

actor rakuman family
actor rakuman family