நடிகர் மனோபாலாவை பற்றி உருக்கமான பதிவை வெளியிட்ட ரஜினி.!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றி வந்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மனோபாலா இவர் மறைந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள் திரை பிரபலங்களும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை சமூக வலைதளபக்கங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர்,காமெடி நடிகர் மற்றும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கணகச்சிதமாக ஏற்று நடிக்கும் ஒரு நடிகர் என்றும் கூறலாம்.உடல் நலக்குறைவால் தமிழ் திரையுலகில் இருந்து பிரிந்த இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தற்பொழுது தங்களது இரங்கலை நேரில் வந்தும் இணையதளம் மூலமாகவும் தெரிவித்து வருகிறார்கள். அதே போல் நடிகர் ரஜினியும் மனோபாலாவின் இறப்பு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் பிரபல இயக்குனரும் நடிகருமான அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகர் மனோபாலா கிட்டத்தட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதேபோல் இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்துள்ளதாம்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் இன்று திடீரென அவரது குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை விட்டு பிரிந்து விட்டார். அவரது இழப்பு குறித்து பல பிரபலங்களும் கண்ணீர் மல்க அவருடன் இருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றவற்றை ஷேர் செய்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment