தன்னுடைய நிறைவேறாத ஆசையினால் கடிதம் எழுதிய நடிகர் ரஜினிகாந்த்.! கடிதத்தை ஏற்று ஆசையை பூர்த்தி செய்வாரா அம்பானி.?

தன்னுடைய கனவு இன்னும் நிறைவேறவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது வரையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இவருடைய திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது. அந்த வகையிலே இவருடைய நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் வசூலில் கோடிகளை குவித்தது.

இதனை அடுத்து தற்பொழுது இவர் ஜெயிலர் திரைப்படத்தின் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் மேலும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் நிலையிள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தினை அடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அம்பானிக்கு நடிகர் ரஜினி எழுதியிருக்கும் கடிதம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது  ரஜினிகாந்த் அவர்கள் மும்பைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அம்பானியின் மனைவி நீதா அம்பானி அவர்கள் மும்பையில் கலாச்சாரம் மைய கட்டிடம் ஒன்றை கட்டியிருக்கிறார். எனவே ரஜினிகாந்த் தான் இதனை திறந்து வைத்தார். மேலும் ரஜினிகாந்துடன் இந்த நிகழ்ச்சியில் இளைய மகள் சௌந்தர்யாவும் கலந்து கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.

Rajini
Rajini

இப்படிப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் கலாச்சாரம் மையத்தின் பிரம்மாண்ட அலங்காரம் சிறப்பான கட்டிடக் கலையினால் நான் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன் இந்திய கலைகளை மேம்படுத்துவதற்காக மும்பையில் பிராட்வே பாணி கலாச்சாரம் மையத்தை திறந்ததில் மகிழ்ச்சி. இந்த அரங்கத்தின் அற்புதமான வசதியை பார்த்த பிறகு இந்த என்எம்ஏசிசி திரையரங்கில் நடிக்க விரும்புகிறேன் இந்த அரங்கில் ஒரு முறையாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் இப்பொழுது என்னுடைய மிகப்பெரிய கனவாக இருக்கிறது என கூறி இருக்கிறார்.

Leave a Comment